கடலூர், ஜூலை 16- என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்ட மக்க ளுக்கு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கை களை முன்வைத்து வெகுஜன அமைப்புகள் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற வேண்டும், நிலம் கொடுத்த விவசாயி களுடன் பிரச்சனைகளை பேசித் தீர்க்க வேண்டும், சிஎஸ்ஆர் நிதியை முழுமையாக கடலூர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணி களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஏரி குளம் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு, விவசாய சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள், கருத்தரங்கம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் என்எல்சி சுற்றியுள்ள கிராமங்களில் பிரச்சார இயக்கமும் மேற்கொள்ளப்படுகி றது. அதன் ஒருபகுதியாக கோரிக்கைகளை விளக்கி பண்ருட்டி ஒன்றியப் பகுதிகளில் செவ் வாய்க்கிழமை பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விதொச மாவட்டத் தலைவர் எஸ்.கே.ஏழுமலை தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஜி. மாதவன், சிஐடியு துணைத் தலைவர் எஸ்.திரு அரசு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், விதொச ஒன்றியத் தலை வர் டி.ஜெகதீசன், ஒன்றியச் செயலாளர் குமர குருபரன், விவசாய சங்க ஒன்றியத் தலைவர் எம்.ராஜேந்திரன் வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் ஏ.பன்னீர், ஏ.பாபு, கே.வட மலை, ஆர்.ராஜேந்திரன், சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.