districts

img

காலி பணியிடங்களை நிரப்புக மத்திய அமைப்பின் வடக்கு கிளை கோரிக்கை

சென்னை, ஜூலை 28- மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என மின் ஊழியர் மத்திய அமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் வடக்கு கிளை 17ஆவது மாநாடு  புதனன்று (ஜூலை 27) பெரம்பூரில் நடை பெற்றது. கிளைத் தலைவர் பி.கதிரேசன் தலைமை தாங்கினார். சங்கக் கொடியை முன்னாள் நிர்வாகி எல்.கோபிநாதன் ஏற்றி னார். பொன்னேரி கோட்டச் செயலாளர் எம்.ஜெயகுமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு வடசென்னை மாவட்ட துணைத்  தலைவர் பி.என்.உண்ணி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். கிளைச் செயலா ளர் ஜி.சத்யமூர்த்தி செயலாளர் அறிக்கை யையும், பொருளாளர் ஜி.மதனகோபால் வரவு - செலவு அறிக்கையையும் சமர்ப்பித்த னர். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப் புக் குழு கன்வீனர் எம்.தனலட்சுமி, தமிழ்நாடு  பவர் இன்ஜினியரிங் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளர் கே.அருள்செல்வன், வடக்கு மண்டலச் செயலாளர் ஆர்.ரவிக் குமார், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் எம்.தயாளன், துணைத்  தலைவர் எம்.சாலட், கிளைச் செயலாளர்கள் எஸ்.கண்ணன் (மத்திய சென்னை), எஸ்.எஸ்.கணேஷ்ராவ் (சென்னை மேற்கு), ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் வடக்கு கிளைச் செயலாளர் என்.பழனிவேல், ஜிசிசி சென்னை கிளைச் செயலாளர் எம்.முத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலத்  தலைவர் தி. ஜெய்சங்கர் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.  முன்னதாக தண்டையார்பேட்டை கோட்டச் செயலாளர் டி.சந்திரசேகர் வர வேற்றார். இணைச் செயலாளர் வி.உமா நந்தன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்ட தொழி லாளர்களுக்கு தனி சீனியாரிட்டி அடிப்படை யில் பதவி உயர்வு வழங்கி அதே இடத்தில்  பணியமர்த்த வேண்டும், கணக்கீட்டு பிரிவில் பழுதடைந்த கணினி, பிரிண்டர், மேசை,  நாற்காலிகளை மாற்றி புதிதாக வழங்க வேண்டும், சிபிஎஸ் திட்டத்தின் கீழ் பணி யாற்றும் அனைவருக்கும் சிபிஎஸ் கணக்கு  சீட்டு வழங்க வேண்டும், தரமான தளவாடப்  பொருட்களை தங்கு தடையின்றி வழங்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. கவுரத் தலைவராக ஜி.மதனகோபால், தலைவராக பி.கதிரேசன், செயலாளராக டி.சந்திரசேகரன், பொருளாளராக எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.