tamilnadu

img

தவெக வேட்பாளர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்!

பூந்தமல்லி தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாசம் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தவெக மகளிர் அணியைச் சேர்ந்த ஒருபெண் நிர்வாகி ஒருவர், பூந்தமல்லி வேட்பாளர் பிரகாசம் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, அந்த பெண் தனது கணவருடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்திற்கு நேரில் சென்று முறையிட்டார்.
தான் அளித்த புகாரில், சம்பவம் குறித்து கட்சித் தலைமையிடம் முன்பே தெரிவித்திருந்தாலும், கடந்த 6 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தான் தற்போது காவல்துறையை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.