செங்கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
சிவகங்கை, ஜன.7- செங்கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி, அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சிவ கங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சிவகங்கை அருகே மேலச்சாலூர், கீழச்சாலூர், இடையமேலூர், சிவல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்ப ளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட் டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். கிணற்றுப் பாசனத்தின் மூலம் விளையும் இந்த செங்கரும்புகள், சிவகங்கை, மதுரை, மேலூர், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. கடந்த ஆண்டு அரசு, ஒரு செங்கரும்பை ரூ.26 என்ற விலையில் கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்பில் வழங்கியதாகவும், ஆனால் அந்த கொள்முதல் அனைத்து விவசாயிகளையும் உள்ளடக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். இந்த ஆண்டு சுமார் 3.5 லட்சம் செங் கரும்புகள் விளைந்துள்ள நிலையில், அனைத்து விவசாயிகளிடமிருந்தும் அரசு நேரடியாக செங்கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், உயர்ந்து வரும் உற்பத்தி மற்றும் பாசனச் செலவுகளை கருத்தில் கொண்டு, ஒரு கரும்புக்கு கூடுத லாக ரூ.3 வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இடைத்தரகர்கள் இன்றி அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் சார்பில் சிவ கங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விவசாயச் செலவு கள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அரசு தங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேரோட்டத்தில் நகை
திருட்டு: 2 பெண்கள் கைது சிவகாசி, ஜன.7- சிவகாசியில் தேரோட்டத்தில் நகை திருடிய 2 பெண் களை போலீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த வர் முத்துலட்சுமி ( 58). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகாசியில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் சாமி தரிசனம் செய்தார். அப்போது பையில் வைத்தி ருந்த பணப்பை காணாமல் போனது. அதில் இருந்த வங்கி ஏ.டி.எம். அட்டை, ஸ்மார்ட் கார்டு, பான்கார்டு, இ.எஸ்.ஐ. கார்டு, 37 கிராம் எடையுள்ள தங்க செயின் மற்றும் பணம் ஆகியவையும் திருடு போனது. இதுகுறித்து சிவகாசி நகர் காவல்நிலையத்தில் முத்து லட்சுமி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தேரோட்டம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை திருடிய சிவகாசி புதுத்தெருவை சேர்ந்த முனியம்மாள், ஆறுமுகத்தாய் என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து 2 பேரை யும் போலீசார் கைது செய்தனர்.
போக்சோ வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது
திருவில்லிபுத்தூர், ஜன.7- மம்சாபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி யில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒரு வர், முகநூல் மூலம் அறிமுகமான சேலம் மாவட்டம் ஆத்தூர் நயினார் பாளையத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் அழைத்ததன் பேரில் சேலம் சென்று அவரோடு நெருக்கமாக பழகியுள்ளார். இதனை மாணவி பெற்றோரிடம் கூறியதன் அடிப்படையில் பெற் றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் மகிளா நீதிமன்ற உத்தரவின் பேரில் மம்சா புரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து 2024 நவம்பர் மாதம் முதல் தலைமுறைவாக இருந்த கணேசனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படையினர் செவ்வாயன்று சேலம் மாவட்டம் நயினார் பாளையத்தில் கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இராஜபாளையத்தில் சிபிஐ ஆர்ப்பாட்டம்
இராஜபாளையம், ஜன.7- வெனிசுலா நாட்டில் அத்துமீறி நுழைந்து அமெரிக்கா ஜனாதிபதியை கடத்தி சென்றதை கண்டித்து விருது நகர் மாவட்டம் இராஜபாளையத்தில் சிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் பி.கே.விஜயன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் பொ.லிங்கம், கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வி.ரவி, கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.பி.முத்துமாரி, மேற்கு ஒன்றியச் செயலாளர் ராமச்சந்தி ரன், வழக்கறிஞர் பகத்சிங், கணேசமூர்த்தி உள்பட பலர் பேசினர். இதேபோல் வத்திராயிருப்பிலும் சிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளியை வெட்டியவர் கைது
தேனி, ஜன.7- தேனி அரண்மனைப்புதூரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் மணிகண்டன்(46). தேனி, ராஜா களம், கண்ணாத் தாள் கோயில் தெருவைச் சேர்ந்த தங்கம் மகன் வினோத் குமார்(36). இருவரும் டைல்ஸ் பதிக்கும் தொழிலாளிகள். இதில் மணிகண்டனிடமிருந்த டைஸ்ல் பதிக்கும் உப கரணங்களை வினோத்குமார் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். மணிகண்டன் வினோத்குமாரின் வீட்டுக்குச் சென்று தனது உபரகணங்களை திரும்பக் கேட்ட போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வினோத்குமார் மணிகண்டனை அரி வாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காய மடைந்த மணிகண்டன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.
பேருந்தில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு
தேனி, ஜன.7- தேனியிலிருந்து வீரபாண்டிக்கு பேருந்தில் சென்ற பெண் வைத்திருந்த 19 பவுன் தங்க நகைகள் திருடு போன தாக வீரபாண்டி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, காந்திநக ரைச் சேர்ந்த மகேந்திரன் மனைவி சுமிதா. இவர், தேனி யிலிருந்து வீரபாண்டிக்கு அரசுப் பேருந்தில் சென்றுள் ளார். வீரபாண்டியில் பேருந்திலிருந்து கீழே இறங்கி பார்த்த போது சுமிதா பையில் வைத்திருந்த 19 பவுன் எடை யுள்ள தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்துள் ளது. இதுகுறித்து சுமிதா அளித்த புகாரின் மீது வீர பாண்டி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசா ரிக்கின்றனர்.