அதி தீவிர வெப்ப நாட்கள் அதிகரிக்கின்றன - சிதம்பரம் இரவிச்சந்திரன்
1990களில் இருந்து ஒவ் வொரு ஆண்டும் உல கின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் அதி தீவிர வெப்பநிலை உயர்கிறது. அச்சுறுத்தும் இந்த அதி தீவிர வெப்ப உயர்வில் இருந்து லண்டன் முதல் டோக்கியோ வரை உள்ள மாநகர மக்கள் காப்பாற்றப்படவேண்டும். ஆண்டு தோறும் வெப்பம் அதிகமாக இருக்கும் நாட்கள் 25% அதிகரிக்கிறது. அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் இந்த வெப்ப உயர்வால் பலர் பாதிக்கப்படுவர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வாஷிங்டன் முதல் டோக்கியோ வரை காலநிலை மாற்றம் மோசமாவதால் வாஷிங்டன் டி சி, மாட்ரிட் முதல் டோக் கியோ, பெய்ஜிங் வரை உள்ள மாநகரங் களில் வெப்ப நாட்கள் அதிகரிக்கின்றன. மக்கள்தொகை அதிகமாக உள்ள 43 உலக மாநகரங்களில் 1994-2003இல் சராசரி வெப்பநிலை ஆண்டிற்கு 1062 நாட்களாக இருந்தது. இது 2015-2024ல் 1,335 நாட்களாக அதிகரித்துள்ளது என்று பன்னாட்டு சூழல் மற்றும் வளர்ச்சி கழகத்தின் (International Institute for Environment and Development) ஆய்வு கூறுகிறது. இந்நிலை உலகில் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. இதில் 35 டிகிரிக்கும் அதிக வெப்ப நிலை உள்ள சராசரி நாட்கள் ரோம் மற்றும் பெய்ஜிங்கில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. மணிலாவில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மாட்ரிடில் 35 டிகிரிக்கும் அதிக வெப்பம் உள்ள சராசரி நாட்கள் முன்பு 25 என்று இருந்தது இப்போது 47 நாட்களாக அதிகரித் துள்ளது. பொதுவாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும் லண்டனில் 35 டிகிரி வெப்பநிலைக்கும் கூடுதலாக உள்ள நாட்கள் இரு மடங்காகியுள்ளது. முதியோர், ஏழைகளைப் பாதிக்கும் “உலகளவிலான பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வு ஒவ்வொரு வெப்ப அலை வீச்சையும் தீவிரமடையச் செய்கிறது. கடந்த முப்பதாண்டில் அதி தீவிர வெப்பநிலை பல மில்லியன் கணக்கானவர்களின் மரணத்திற்குக் காரணமாகியுள்ளது. இதனால் விரை வாக வளரும் நகரங்களின் முதியோர் மற்றும் ஏழைகள் வெகுவாக பாதிக்கப் படுகின்றனர். அரசுகள் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டதை விட இது அதிகம். வெப்ப உயர்விற்கு ஏற்ப தகவ மைத்துக் கொள்ளவில்லை என்றால் வெப்பத் தீவு விளைவால் அதிக அசௌக ரியத்தையும் ஆபத்தையும் மில்லியன் கணக்கான நகர் வாழ் மக்கள் அனுப விக்க நேரிடும். வெப்பத் தீவு விளைவு என்பது பசுமை யிடங்கள் இல்லாத ஒரு நகர்ப் பகுதியில் உருவாகும் வெப்பம் வளி மண்டலத்தை அடைய முடியாமல் அங்கேயே தங்கு வதால் உருவாகும் வெப்ப உயர்வைக் குறிக்கிறது. லண்டன், லுவாண்டா, லிமா அல்லது வேறு எந்த பெரிய நகரத்தில் வாழ்ந்தாலும் அதி தீவிர வெப்பத் தால் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழைகளே அதிகம் பாதிக்கப்படு கின்றனர். இது பூமியின் தென் கோளத்தில் திட்டமிடாமல் வாழும் சமூகங்களில், மிகக் குறைவான வருமானம் உடைய வர்களை அதிகம் பாதிக்கிறது. தரமற்ற வீடுகளும் இதற்கு ஒரு காரணம். உலகில் மூன்றில் ஒரு பகுதி நகர்வாசி களும் குடிசைப் பகுதிகள், புறம்போக்கு இடங்களில் வாழ்கின்றனர்” என்று பன் னாட்டு சூழல் மற்றும் வளர்ச்சி கழகத் தின் (IIED) அன்னா வால்நிக்கி (Anna Walnycki) கூறுகிறார். காலநிலை மாற்றம் இன்று புதிய யதார்த்தம். இதற்கும் மேல் அரசுகள் செயலில் இறங்காமல் தங்கள் தலைகளை மணலில் புதைத்துவைத்துக்கொண்டிருக்கமுடியாது. 2030ஆம் ஆண்டிற்குள் வெப்ப உயர்வை இப்போது உள்ளதில் இருந்து 45% குறைக்கவேண்டும் என்று பாரிஸ் ஒப்பந்தம் கூறியது. என்றாலும் நாளுக்கு நாள் புதை படிவ எரிபொருட்களால் ஏற்படும் உமிழ்வு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் 2024இல் யு எஸ், கனடா முதல் எகிப்து, சீனா மற்றும் ஜப்பான் வரை உலக நகரங்களில் வெப்ப உயர்வு சாதனையளவில் இருந்தது. புதைபடிவ எரிபொருட்களின் மிதமிஞ்சிய பயன்பாடு டோக்கியோவில் 2025 ஜூலை மாதத் தில் 41.2 டிகிரி வெப்பநிலை நிலவியது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நிலவிய உயர் வெப்பத் தால் ஐரோப்பாவில் 16,500 பேர் உயிரி ழந்தனர். டாலஸ், ஷங்காய் உட்பட பல முக்கியப் பெருநகரங்களும் அதி தீவிர வெப்பத்தால் பாதிக்கப்பட்டன. உலக நகரங்களில் வெப்பநிலை ஈரப்பதத் திற்கும் வறண்ட காலநிலைக்கும் இடையில் மாறி மாறி ஊசலாடுகிறது. இந்த புதிய பகுப்பாய்வில் அதிக மக்கள்தொகை உள்ள, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 40 தலை நகரங்கள் மற்றும் 3 வளரும் நகரங் களின் வெப்பத் தரவு விவரங்கள் ஆராயப் பட்டன. புதைபடிவ எரிபொருள் உமிழ்வு குறித்து எந்த ஒரு தீர்வும் காணாமல் சமீபத்தில் முடிந்த காப்30 காலநிலை மாநாடு நடந்த பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவில் 1994-2003 காலத்தில் சராசரி வெப்பநிலை 35 டிகிரிக்கும் அதிக மாக இருந்த நாட்கள் மூன்று மட்டுமே. ஆனால் 2015-2024 காலத்தில் வெப்ப உயர்வு அதிகமாக இருந்த நாட்கள் 40. 1990களில் தென்னாப்பிரிக்க தலை நகரான பிரிட்டோரியாவில் 35 டிகிரிக்கும் அதிக வெப்பம் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது இது 11 நாட்களாக அதிகரித்துள்ளது. இந்த அதி தீவிர வெப்பத்தில் இருந்து உயிர்கள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க குளிர்ச்சியான இடங்கள், ஓய்வெடுக்கும் நிழற்பகுதிகள், வேலை நேர மாற்றம், உயர் வெப்ப முன்னறிவிப்பு போன்ற நடவடிக்கைகளை வலியுறுத்தி தகவமைப்பிற்கான உலக மையம் (Global Center on Adaptation (GCA)) செயல் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இரவிலும் வெப்பம் குறையாமல்... “அதி தீவிர வெப்பநிலை ஆபத்து என்பது தொலைதூரத்தில் இல்லை. பொருளாதாரம், எதிர்காலத்தை அச்சு றுத்தும் இது இப்போது நம் கண் முன் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பயனுள்ள தீர்வுகளை ஒன்றுபட்டு செயல்படுத் தினால் மட்டுமே நாம் நம்மையும் நம் வருங்கால சந்ததிகளையும் இந்த ஆபத் தில் இருந்து பாதுகாக்கமுடியும்” என்று செனகல் நாட்டின் முன்னாள் அதிபரும் தகவமைப்பிற்கான உலக மையத்தின் தலைவருமான மாக்கி சால் (Macky Sall) கூறுகிறார். “வெப்ப அலை வீச்சு உள்ள நாளின் இரவிலும் வெப்பநிலை குறையாமல் நாம் அவதிப்படுகிறோம். இது ஒரு பிரச் சனை இல்லை. குளிர் சாதனத்தை பொருத்திவிட்டால், ஜன்னல்களை திறந்துவைத்தால், நிழல் தரும் இடங் களை அமைத்தால் இந்த ஆபத்தில் இருந்து நாம் மீளலாம் என்று நினைப் பது தவறு. மிதமிஞ்சிய புதைபடிவ எரிபொ ருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், பசுமைப் பரப்புகளை அதிகரித்தல், காடு களை பாதுகாத்தல், புதிய இடங் களில் காடுகளை உருவாக்குதல் போன்ற வையே வெப்பநிலையைக் குறைக்க நம் முன் உள்ள சிறந்த தீர்வு” என்று அன்னா வால்நிக்கி கூறுகிறார்.
