ஈரோடு: ஓராண்டில் 48 குழந்தை திருமணங்கள் தடுப்பு
ஈரோடு, ஜன.2– ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 48 குழந்தை திரு மணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளதாகவும், குற்றச் செயல்களில் ஈடு பட்ட 3,480 பேர் கைது செய்யப்பட் டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா தெரி வித்துள்ளார். இதுகுறித்து எஸ்பி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளதாவது, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட 427 வழக்கு கள் கண்டறியப்பட்டு, ரூ.3.15 கோடி மதிப்பிலான 538 பவுன் நகைகள் மற்றும் 133 வாகனங்கள் மீட்கப்பட் டுள்ளன. மேலும், சிவகிரி இரட் டைக்கொலை மற்றும் கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தை மீட்பு ஆகிய நிகழ்வுகளில் துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு முதல் வர் பாராட்டு தெரிவித்துள்ளார். கஞ்சா, குட்கா மற்றும் மது விற் பனை தொடர்பாக ஆயிரக்கணக் கான வழக்குகள் பதியப்பட்டு, 465 கிலோ கஞ்சா, 10 டன் குட்கா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப் பட்டன. ‘போலீஸ் அக்கா’ திட்டம் மூலம் 2,768 விழிப்புணர்வு கூட்டங் கள் நடத்தப்பட்டு 48 குழந்தை திரு மணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. 225 போக்சோ வழக்குகள் பதியப் பட்டு 20 வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. போக்கு வரத்து விதிமீறல்களுக்காக ரூ.5.13 கோடி அபராதம் வசூலிக்கப் பட்டதுடன், 10,003 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 185 மாயமான கைப்பேசிகள் மீட்கப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக் கப்பட்டன. தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 66 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள் ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.