சென்னை, ஜூன் 10- அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணி யாற்றி வரும் இடை நிலை ஆசிரியர்கள் தங்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதால் தமி ழக அரசும் கல்வித்துறையும் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சங்கர் வெளி யிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மேல் நிலைப் பள்ளிகளில் பணி யாற்றும் இடைநிலை ஆசிரி யர்களுக்கு 2003 ஆம் ஆண்டி லிருந்து அரசு ஆணை 100 படியும், அரசு கொள்கை அடிப்படையிலும் பணி நிய மனம் கிடையாது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஆண்டு தோறும் வழங்கி வந்த பதவி உயர்வு கலந்தாய்வு 2 ஆண்டுகளாக நடத்தாமல் இடைநிலை ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறை வஞ்சித்து வருகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இணை இயக்குநரிடம் முறையிட்டதன் பேரில் காலிப்பணியிடம் இல்லை என்பதால் பதவி உயர்வு வழங்க முடியவில்லை என்று கூறினார். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதி யான உயர்கல்வி படித்துள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் அதே இடத்தில் பட்டதாரி ஆசிரியர் களாக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறையும், உட்படுத்தி இருக்க வேண் டும். ஆனால் அப்படி செய்ய வில்லை. இதனால் ஆசிரியர் களுக்கு மிகுந்த மன உளைச் சலை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர்களும் பணி நிர்ணய கணக்கீட்டில் அனைத்து பள்ளிகளிலுள்ள இடை நிலை ஆசிரியர்களை உபரி பணியிடங்களாக காட்டி யுள்ளார்கள். இதனடிப்படை யில் பள்ளிக் கல்வி இயக்கு நர், இணை இயக்குநர்க ளிடம் முறையிடப்பட்டது. அதன்பிறகு, அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கிடையாது என்றும் பணி நிரவலில் இடமாற்றம் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தார். எனவே இந்த பிரச்சனை யில் பள்ளிக்கல்வித்துறை தலையிட்டு இடைநிலை ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய வேண்டாம் என ஆணை பிறப்பிக்குமாறும் இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர்க ளுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பதவி உயர்வு வழங்கி இடைநிலை ஆசிரியர்கள் மன உளைச்சலை போக்க வேண்டும் என தமிழக அரசை யும் பள்ளிக் கல்வித்துறையும் இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக் கையில் தெரிவித்திருக்கிறார்.