tamilnadu

img

ஆக.5 போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்பு

சென்னை:
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி ஆக.5 அன்று மாநிலம் முழுவதும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் முழுமையாக பங்கேற்கிறது என்று அமைப்பின் பொதுச்செயலாளர் அ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 6500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான குற்றவியல் மற்றும் 17(பி) ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது பள்ளிக்கல்வித்துறையின் 17(பி) ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தணிந்த பிறகு மாணவர்களின் நலன் கருதி சுழற்சி முறையில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.5 அன்று இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பங்கேற்கிறது.அரசு, அரசு உதவிபெறும் நகராட்சி, மாநகராட்சி உயர், மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 4 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ள நிலையல், இவ்வாண்டு பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலை வெளியிட வேண்டும். அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.