புதுச்சேரி, நவ. 22- நவம்பர் 27 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் பந்த் போராட்டத்தில் சிஐடியு தனியார் போக்குவரத்து தொழிலாளர்களும் பங்கேற்க முடிவு செய்துள்ள னர். புதுச்சேரி தனியார் போக்குவரத்து தொழி லாளர்கள் சிஐடியு சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் முத லியார்பேட்டையில் நடை பெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பிர தேச தலைவர் மது, தமிழ் மாநிலக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ஜோதிபாசு, சிஐடியு பிரதேச துணைத் தலைவர் குணசேகரன் ஆகி யோர் கலந்துகொண்டனர். முறைசாரா தொழிலா ளர்களுக்கு நலவாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐ டியு, ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நவம்பர் 27 ஆம் தேதி புதுச்சேரியில் நடை பெறும் வேலை நிறுத்தப் (பந்த்) போராட்டத்தில் தனி யார் போக்குவரத்து தொழி லாளர்களும் பங்கேற்பது என்றும் அன்றைய தினம் பிள்ளைத்தோட்டத்தில் உள்ள பெரியார் சிலையி லிருந்து ஊர்வலமாகச் செல்வது என்றும் முடிவு செய்தனர்.