tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

போதைப்பொருள் கடத்தி வந்த  நபர் கைது

சென்னை, அக். 2- சென்னை விமான நிலைய பன்னாட்டு முனை யத்தில் கடந்த ஞாயிறு இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் அதிகளவு போதைபொருளை ஒருவர் கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்  படியான சுமார் 35 வயது மதிக்கத்தக்க அசாம் மாநில வாலிபரை அலுவ லகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், கம்போடியாவுக்கு சுற்றுலா சென்று, சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு திரும்பி வந்தது தெரியவந்தது. அவரது உடை மையை சோதனை செய்த போது, அதில் ரூ.35 கோடி மதிப்பிலான 3.5 கிலோ கொகைன் போதை பொருள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த .35 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் போதைபொருளை பறிமுதல் செய்தனர்.

பட்டா கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை,அக். 2- தமிழகம் முழுவதும் குடிமனை, குடி மனை பட்டா, அனுபவ நிலங்களுக்கு நில பட்டா கேட்டு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (செப் 30) ஆர்ப்பாட்டம் நடத்த கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் அனு மதி கேட்டு மனு அளிக்கப் பட்டது.  ஆனால் திடீரென செப்டம்பர் 29ஆம் தேதி இரவு காவல்துறை சார்பில் அனுமதி மறுப்பு கடிதம் அளித்துள்ளனர். தமிழ கத்தில் அனைத்து மாவட்டங்களை ஒப்பிடும் போது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த விதிவிலக்கு நடைமுறை யில் உள்ளது.  இதையடுத்து திட்டமிட்ட படி செப்டம்பர் 30ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு விவசாயி கள், விவ சாயத் தொழி லாளர்கள்: திரண்டனர்.  அப்போது காவல்துறை யினர் அவர்களை தடுத்தனர் இதனால் சங்க நிர்வாகி களுக்கும் காவல் துறை யினருக்கும் இடையே வாக்குவாதம் நடை பெற்றது.  பின்னர் மாவட்ட நீதி துறை வட்டாட்சியர் ஜெய பிரகாஷ் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ச.கிட்டு, மாவட்டச் செய லாளர் எல்.சி.மணி, பொரு ளாளர் சி.ராதா கிருஷ்  ணன், விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சந்திரன், செயலாளர் பி.ரகுபதி, பொருளாளர் வெங்கடே சன், சிஐடியு மாவட்ட அமைப்பாளர் ஆ.தவராஜ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அ.கலைவாணன், செயலாளர் இ.சிவராம கிருஷ்ணன், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் என்.ரமேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.