சென்னை:
சென்னையில் பெருமளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளனர்; இதில் உண்மையில்லை என்றும் குடிநீர் விநியோகத்தை மண்டல வாரியாக குழுக்கள்அமைத்து கண்காணிக்கப்படுவ தாக உள்ளாட்சித் துறை அமைச்சர்வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னையில் பெருமளவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் மக்கள் காலி குடங்களுடன் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது குடிநீர் பற்றாக் குறையை போக்கும் விதமாக பேரூராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்து என அனைத்து பகுதிகளுக்கும் அரசு தரப்பில் இருந்துலாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்
பட்டு வருகிறது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து, பல்வேறு ஆலோசனைக் கூட்டத்தை முதல்வர் பழனிசாமி ஏற்கனவே நடத்தியுள்ள நிலையில், திங்க ளன்றும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சென்னை யில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகிறார்கள். இதில் உண்மையில்லை. சென்னையில் எந்த ஐ.டி. நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டி லிருந்து வேலை செய்யச் சொல்லவில்லை, ஓட்டல்கள் எதுவும் தண்ணீர் இல்லாமல் மூடப்படவில்லை”
என்று கூறிக் கொண்டார்.
மேலும், ஒவ்வொரு அதிகாரிகளும் தங்களுடைய குடும்பத்திற்கு வரும் பிரச்சனையை போல் இந்த குடிநீர் பிரச்சனையை கையாள வேண்டும் என்றும்அனைவரும் உடனடியாக களத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது. சென்னையில் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் நவம்பர் மாதம் வரை விநியோகம் செய்ய உள்ளாட்சி துறை மூலம் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரு இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து 90 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கவும், ஓட்டல்களில் தண்ணீர்தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக பாக்குமட்டை பிளேட்பயன்படுத்த அறிவுறுத்தியுள்ள தாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.