tamilnadu

அமைச்சர் வேலுமணி குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு தடையில்லை

சென்னை, ஏப்.11-உள்ளாட்சித்துறை அமைச் சர் எஸ்.பி.வேலுமணி குறித்து பேச தடை கோரிய வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் துறை மற்றும் பொள்ளாச்சி விவகாரம் தொடர் பாக அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி வருவதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வேலுமணியை பற்றி பேச ஸ்டாலினுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது, நீதிபதி ஆர். சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது தேர்தல் பிரச்சாரங் களில் இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டுவது வாடிக்கை தான் என நீதிபதி கூறினார். எஸ்.பி. வேலுமணி குறித்து பேச ஸ்டாலினுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, 16ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.