சென்னை:
எப்சி எடுக்கவரும் ஆட்டோக்களுக்கு ஒப்பந்தக்காரர் கொடுக்கும் 300 இல் இருந்து 600 ரூபாய்க்கான ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டுமே ஆட்டோக்களுக்கு எப்சி வழங்கப்படும் என்று கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு ) மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.சிவாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: அனைத்து ஆட்டோ தொழி லாளர்களுக்கும் ரூ. 7500 வீதம் ஆறு மாத காலத்திற்கு கொரோனா நிவாரணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திஆகஸ்ட் 18 அன்று தமிழகம் முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தொழில் இல்லாமல், வருமானம் இல்லாமல் வேதனையில் 50 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இயற்கைக்கு மாறான மரணத்தை தழுவியுள்ள நிலையில் அடுத்த கட்ட தாக்குதலை ஆட்டோ தொழிலாளர்கள் மீது அரசாங்கம் ஏவியுள்ளது.யாரோ ஒருவர் பிழைக்க எப்சி எடுக்கவரும் ஆட்டோக்களுக்கு மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என கட்டாயப்படுத்துவதை தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறது. ரூ.60 பெறுமான ஸ்டிக்கர் ரூ.300 முதல் ரூ.600 வரை ஆட்டோ தொழிலாளர்களிடம் கட்டாயப்படுத்தி கொள்ளை அடிக்கப்படுகிறது. மேலும் காவல்துறை, கொரோனாகாலத்தில் ஆட்டோ தொழிலாளர் களுக்கு தெரியாமல் மின்னணு இயந்திரம் மூலம் விதிக்கப்படும் அபராதமும் கட்ட வேண்டும் எனவும், அப்போது தான் எப்சி வழங்கப்படும் என ஆட்டோ தொழிலாளர்களுக்கு நெருக்கடி தருகிறார்கள். மேலும் இடைத்தரகர் மூலம் ரூ.625-க்கான எப்சி கட்டணத்திற்கு ரூ.3500 வரை வசூலித்து கொள்ளையடிக்கிறார்கள். இவர்களின் கேடுகெட்ட நடவடிக்கையால் தான் அயனா வரம் ஆட் தொழிலாளி தனதுஆட்டோவையே தீயிட்டு கொளுத்தி யதை சுட்டிக் காட்டுகிறோம்.
எனவே தமிழக அரசாங்கம் எப்சி எடுக்க ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக வசூலிக்க கட்டாயப்படுத்துவதை உடனடியாக தடை செய்யவேண்டும். கொரோனா காலத்தில் போடப்பட்ட அனைத்துஅபராதங்களையும் தள்ளுபடி செய்திட வேண்டும். ஏற்கனவே கடுமையான நெருக்கடியில் உள்ள ஆட்டோ தொழிலாளிகள் மீது அடுக்கடுக்கான தாக்குதலை அரசாங்கம் தொடுத்தால் எப்சி எடுப்பதையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்து ஸ்டிக்கர் ஒட்டுவதையும், அபராதங்களை கட்டச்சொல்லி நிர்பந்திப்ப தையும் கைவிட வேண்டும். தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 18 ல் நடைபெறும்ஆர்ப்பாட்டத்தில் இந்த கோரிக்கை களையும் இணைத்து போராட்டத்தை நடத்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.