சென்னை:
ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம்(சிஐடியு)மாநிலத் தலைவர் வி.குமார், பொதுச்செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வின் அவலம் நீங்க அரசு 15 ஆயிரம்ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும் தமிழகம் முழுவதும் 60நாட்களும், சென்னையில் 70நாட்களும் முடங்கி கிடந்த ஆட்டோ தொழிலாளர்கள் வெளியே வந்து ஆட்டோக்களை இயக்க துவங்கியுள்ளனர். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் நடத்திய பெரும் போராட்டத்திற்கு பின்பே ஆட்டோக்கள் இயக்க தமிழக அரசு அனுமதி கொடுத்தது.
ஆனால் சவாரி கிடைக்கவில்லை. சவாரி கிடைக்காததால் வருமானம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஆட்டோ தொழிலாளியின் வறுமையும், துன்பகரமான வாழ்க்கையும் மாறவில்லை.இதற்கு இடையில் கடன் கொடுத்தவர் களின் கழுத்து நெருக்குதல் அதிகரித்து உள்ளது. வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் அரசின் உத்தரவுகளை மீறி பணம் கட்டநெருக்கடி கொடுக்கின்றன. இதன் விளைவாக கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள் ளார். அவர் எழுதி வைத்த கடிதத்தில் ஆட்டோக்களுக்கு கடந்த காலம் போல சவாரி இல்லை. அதனால் வாங்கிய கடன் கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியதிலிருந்து ஆட்டோ தொழி லாளர்களின் வாழ்க்கை எவ்வளவு நெருக்கடியில் இருக்கிறது என்பதை அறியமுடியும்.கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் நிறைந்த வாழ்க்கையை சமாளிக்க அரசாங்கம் ஒவ்வொரு ஆட்டோ தொழிலாளியின் குடும்பத்திற்கும் அரசு நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.