tamilnadu

img

மின்துறையை தனியார்மயமாக்காதே

மின்சார சட்டத்திருத்த மசோதா 2020ஐ திரும்பப் பெற வேண்டும், மின் விநியோக நிறுவனங்களை தனியார்மயக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐக்கிய பொறியாளர் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 16 சங்கங்களின் சார்பில் விழுப்புரம், திருவண்ணாமலை, புதுவை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

**********

திருவண்ணாமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர்கள் கே.காங்கேயன், ஆர்.சிவராஜ், கிளைச் செயலாளர் மு.பாலாஜி, நிர்வாகிகள் குருதேவன், சக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

**********

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வி.பெருமாள், ஜி.ராஜா, ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

**********

புதுவையில் மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் ரஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் வேல்முருகன், செயல்தலைவர் கண்ணன், சிறப்பு ஆலோசகர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

**********

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட தலைவர் கே.விஜயகுமார் தலைமையிலும், ஆசனூரில் திட்ட பொருளாளர் கே.வெங்கடேசன் தலைமையிலும், உளுந்தூர்பேட்டையில் திட்ட செயலாளர் கே.சீனிவாசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

**********