ராஜஸ்தானில் மத வன்முறையை தூண்ட பாஜக தீவிரம்
ஜெய்ப்பூர் மசூதி அருகே பாஜக எம்எல்ஏ வெறுப்பு பேச்சு; வன்முறை பதற்றம்
ஜெய்ப்பூர் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் தலை நகர் ஜெய்ப்பூர் அருகே ஜோஹரி பஜார் பகுதியில் பஹல்காம் பயங்கரவாத சம்ப வத்தை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வெறுப்பு பேச்சுக்கு பெயர் பெற்ற பாஜக எம்எல்ஏவான (ஹவா மகால் - ஜெய்ப்பூர்) பால் முகுந்த் ஆச்சார்யா முஸ்லிம் மக்களை தகாத சொற்களால் விமர்சித்துள்ளார். மேலும் அருகில் உள்ள ஜமா மசூதியில் பாஜக குண்டர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும் நோட்டீஸ் ஒன்றையும் ஒட்டியுள்ளனர். இதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஜோஹரி பஜார் பகுதியில் குவிய, வன்முறை பதற்றம் ஏற்பட்டது. ஜெய்ப்பூர் காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரிக்க, பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா, ”நான் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பேசவில்லை. தீவிரவாதச் செயலையும், பாகிஸ்தானையும் கண்டித்து முழக்கங்களை மட்டு மே எழுப்பினேன். ஆனால் மசூதியில் நோட்டீஸ் ஒட்டியது தொடர்பாக எனக்கு தெரியாது” எனக் கூறினார். பால்முகுந்த் ஆச்சார்யாவின் மழுப்பல் பேச்சாலும், காவல்துறை யினரின் பேச்சுவார்த்தையாலும் முஸ்லிம் அமைப்பினர் எச்சரித்து சென்றனர். இதனால் ஜெய்ப்பூர் ஜோஹரி பஜார் பகுதியில் வன்முறை பதற்றம் நீங்கியது.