கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
பாகிஸ்தானுடன் போர் தேவையில்லை. ஆனால் பாகிஸ்தானுடன் ஒருபோதும் போருக்குச் செல்லக்கூடாது என்று நான் சொல்லவில்லை. போர் தீர்வு அல்ல என்று தான் சொல்கிறேன். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். இருப்பினும் பாதுகாப்பை அதிகரிப்பதில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும்.
உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல்
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதிக்கவும், தேசத்தின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையிலான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றவும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானுடன் ஐசிசி தொடர்கள், ஆசிய கோப்பை என எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடக் கூடாது. பாகிஸ்தான் அணியுடன் உள்ள கிரிக்கெட் ரீதியிலான தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட வேண்டும்.
திரைக்கலைஞர் விஜய் ஆண்டனி
காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்.