districts

img

காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்காதே! ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி,  ஜூலை 15 - யுனைடெட் இந்தியா இன்சூ ரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், ஓரிய ண்டல் இன்சூரன்ஸ் மற்றும் நியூ  இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகிய பொது காப்பீட்டு நிறுவனங்களில் பணி புரியக் கூடிய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும்  ஊழியர்கள் ஊதிய உயர்வு, காப்பீட்டு நிறுவன தனியார் மய மாக்கல் போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப் பினர் கடந்த 59 மாதங்களாகப் போராடி வருகின்றனர்.  இந்நிலையில் 59 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வுக் கான பேச்சுவார்த்தையில் விரைந்து  தீர்வு காண வேண்டும். காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மய மாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைத்து ஊழியர்களுக் கும் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூ தியத்தை 30 சதவீதமாக வழங்க வேண்டும். பென்சனை ஊதிய மாற்றத்திற்கு ஏற்ற வகை யில் வரையறை செய்ய வேண்டும்  என்ற 5 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை  நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டோன் மென்ட் பகுதியில் உள்ள நேசனல் இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற வேலை நிறுத்த  விளக்க ஆர்ப்பாட்டத்திற்கு யுனை டெட் இந்தியா அதிகாரிகள் சங்க தலைவர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார்.  கோரிக்கைகளை விளக்கி மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர்  சங்க தலைவர்கள் ராஜமகேந்திரன், முத்துகுமரன், ராஜன், நல சங்க தலைவர் நளங்கிள்ளி, நியூ இந்தியா அதிகாரிகள் சங்க நீல கண்டன், வினோத்ராஜ், ஓய்வூதி யம் பெறுவோர் சங்க தலைவர் மணி வேல் ஆகியோர்  பேசினர். மேலும்  காலவரையற்ற வேலை நிறுத்தம்  உள்ளிட்ட தொடர் போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளதாக தெரிவித்தனர். 

தஞ்சாவூர்
தஞ்சாவூர் யுனைடெட் இந்தியா அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்கம் ஜெ.தியாகராஜன் தலைமை  வகித்தார். அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கம் மாவட்டச் செயலாளர் டி.பிரபு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் பி.சத்தியநாதன் நிறைவுரையாற்றினார்.  டெல்டா மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன.