districts

img

மின்சாரத் துறையை தனியார்மயமாக்காதே! ஒன்றிய அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, ஆக.9 - 2022 மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை 200  நாளாகி நகர்ப்புறத்தில் விரிவாக்கம் வேண்டும்.  விவசாய இடுபொருட்கள் விலையை குறைத்திட  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் மன்னார்குடி பந்தல டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரெகுபதி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க ஒன்றிய  செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், நகரச் செயலாளர் ஜி.முத்துகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் கே.டி.கந்தசாமி முன்னிலை வகித்தனர். ஊரக  உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் மாநிலக்  குழு உறுப்பினர் ஏ.பி.டி. லோகநாயகி, சிஐடியு  இணைப்பு சங்க நிர்வாகிகள் டி.ஜெகதீசன், ஆ. ஹரிஹரன் உள்ளிட்டோர் பேசினர். மாவட்டச் செயலாளர் முருகையன் சிறப்புரையாற்றினார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஜெயங்கொண்டம் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
கரூர்
சிஐடியு, விவசாயிகள் சங்கம், கட்டுமான சங்கம் இணைந்து கரூர் ஆர்.எம்.எஸ் அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர்  ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்ட செயலாளர் சி.முருகேசன், தள்ளு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.தண்டபாணி, போக்குவரத்து ஆர்.சிறும்பண் ணன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சி.ஆர். ராஜாமுகமது, மாவட்டத் தலைவர் பா.சரவணன், துறைவாரி சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.