புதுக்கோட்டை, நவ.1- ஒன்றிய அரசின் நாசகர மோட்டார் வாகனச் சட் டத்தை தமிழ்நாடு அரசு மாநி லத்தில் அமல்படுத்த அவச ரப்படக் கூடாது. ஸ்பாட் பைன் முறையைக் கைவிட வேண்டும். சட்டத்தின் பெய ரால் ஆயிரக்கணக்கில் அப ராதம் செலுத்தச் சொல்லி துன் புறுத்தக் கூடாது என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை வட்டா ரப் போக்குவரத்து அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தின் மாவட்டப் பொதுச் செய லர் க.ரெத்தினவேலு தலை மை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலர் ஏ.ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். சிஐ டியு மாவட்டத் துணைத் தலைவர் சி.அன்புமணவா ளன், சாலைப் போக்கு வரத்துச் சங்கத்தினர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் துரை.நாராய ணன் உள்ளிட்டோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர்.
திருச்சிராப்பள்ளி
சிஐடியு சாலை போக்கு வரத்து, ஆட்டோ, அரசு போக்குவரத்து தொழிற்சங் கங்கள் சார்பில் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் பேசினார்.