தஞ்சாவூர், அக்.17 - தமிழக அரசு தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல், தன்னிச்சையாக 10 விழுக்காடு போனஸ் அறிவித்ததை கண்டித்தும், 40 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், சிஐடியு சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை காலை நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலா ளர் கே.வீரய்யன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால் கண்டன உரையாற்றினார். இதில், சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் எஸ்.ராஜாராமன், மாவட்டத் தலை வர் ஏ.அதிதூத மைக்கேல் ராஜ், விரைவுப் போக்குவரத்து சங்கம் மாநில துணைத் தலைவர் பி.வெங்கடேசன், எஸ். செங்குட்டுவன், அரசு போக்குவரத்து மத்திய சங்கம் டி.காரல் மார்க்ஸ், டாஸ்மாக் மாவட்ட தலைவர் கே.மதிய ழகன், மாவட்டப் பொருளாளர் ஏ.ஜி.பன்னீர்செல்வம், ஆட்டோ சங்க மாநகர செயலாளர் ராஜா, சாலை போக்கு வரத்து சங்க மாநிலக் குழு டி.பரத்ராஜன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.