tamilnadu

img

திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல்

திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் சனிக்கிழமையன்று (ஏப்.4) தேர்தல் நடத்தும் அலுவலர் ஐ.வளர்மதியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். தயாநிதிமாறன் எம்பி உள்ளிட்ட பலர் உடன்உள்ளனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் ஆர்.டி.சேகர் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் சனிக்கிழமை (ஏப். 4) வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக சர்மா நகர் அருகில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்றனர். இதில் மக்களவை உறுப்பினர்கள் கிரிராஜன், கலாநிதி வீராசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆவடி தொகுதியில் போட்டியிடும் சா.மு.நாசர் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மாரி செல்வியிடம் சனிக்கிழமை (ஏப். 4) வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர். இதில் மேயர் கு.உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், திமுக நிர்வாகிகள் கே.ஜே.ரமேஷ், ம.ராஜி, எஸ்.ஜெயபாலன், பா.நரேஷ்குமார், கே.சுரேஷ்குமார், சா.மு.நா.ஆசிம்ராஜா, டி.தேசிங்கு, சண்.பிரகாஷ், ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன், பகுதிச் செயலாளர் எம்.ராபர்ட் ராஜ், எஸ்.மயில்வாகனன் (சிபிஐ) இரா.அந்திரிதாஸ் (மதிமுக), அ.அமீத்பாபு, விக்டரி மோகன் (காங்கிரஸ்), மு.ஆதவன் (விசிக) உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னா சனிக்கிழமையன்று (ஏப்.4) தேர்தல் நடத்தும் அலுவலர் என்.சுரேசிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.