லால்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் பாரிவள்ளல் வேட்பு மனுத் தாக்கல்
திருச்சிராப்பள்ளி, ஏப். 5- திருச்சிராப்பள்ளி லால்குடி சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பாரிவள்ளல் சனிக்கிழமை லால்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் வேட்பாளர் பாரிவள்ளல், லால்குடி கடைவீதி, பேருந்து நிலையம், ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்.
