சென்னை,டிசம்பர்.06- சென்னையில் வணிகவரித்துறை துணை ஆணையர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வணிகவரித்துறை துணை ஆணையர் செந்தில்வேல் சென்னை போரூர் ஏரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை காணவில்லை என அவரது உறவினர்கள் நேற்று இரவு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
செந்தில்வேல் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.