தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு–வடமேற்கு நோக்கி நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்குச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் வரும் 9ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் அடுத்த சில நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
