states

img

1 லட்சம் மரங்களை வெட்டுவதையும், பயிர்களை அழிப்பதையும் நிறுத்த வேண்டும்

1 லட்சம் மரங்களை வெட்டுவதையும்,  பயிர்களை அழிப்பதையும் நிறுத்த வேண்டும் கர்நாடக வனத்துறைக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

பெங்களூரு கர்நாடக மாநிலம் கோலார்  மாவட்டத்தின் சீனிவாசப் பூர் தாலுகாவில் விவசாயி கள் மற்றும் சில கிராமங்களுக்குச் சொந்தமான 42,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் வருவாய்த்துறை ஆவணங்களிலிருந்து ஒரே இர வில் நீக்கப்பட்டு, வனத்துறையின்  பெயரில் பதிவு செய்யப்பட்டுள் ளது. தலைமுறை தலைமுறையாக  சாகுபடி செய்து வரும் நிலத்திலி ருந்து தங்களை வெளியேற்றுவ தற்கும், பயிர்களை அழிப்பதற்கும் எதிராக இப்பகுதி மக்கள் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப்  போராட்டத்தை கர்நாடக காங்கி ரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை. கிராமங்களே  முடக்கப்படும் அபாயம் 1910ஆம் ஆண்டில் மைசூர் மகா ராஜா வனப்பாதுகாப்புக்காக இந்த  நிலத்தை வனத்துறையிடம் ஒப்ப டைத்ததாகக் கூறி, 2020ஆம் ஆண்  டில் வனத்துறை திடீரென 15,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குச் சொந்தமான இந்த நிலத்திற்கு  உரிமை கோரியுள்ளது. ஆனால்,  விவசாயிகள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு விவசாயம் செய்து வருகின்றனர். வனத்துறையோ 110 ஆண்டுகளுக்குப் பிறகு இப்  போது உரிமை கோருகிறது. விவ சாயிகளிடம் முறையான வரு வாய்த் துறை ஆவணங்களும், விற்  பனைப் பத்திரங்களும் உள்ளன.  ஆனால் காவல்துறை பாதுகாப்பு டன் 70 புல்டோசர் இயந்திரங்களு டன் வந்த கர்நாடக வனத்துறை, விளைச்சலில் இருந்த பயிர்களை  அழித்ததுடன், பலன் தரும் மாமரங்  களையும் வெட்டி வீழ்த்தியது. சிப்  பம் கட்டும் கொட்டகை மற்றும் ஆழ்  துளைக் கிணறுகளும் சேதப்படுத்  தப்பட்டன. குறிப்பாக ஒரு லட்சத் திற்கும் அதிகமான மாமரங்கள் வெட்டப்பட்டுள்ளன அல்லது வெட்  டப்படும் அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளன.  வனத்துறை நிலத்தை எல்லை நிர்ணயம் செய்யும் எல்லைக் கல்  களை ஊன்றி வருகிறது. இதில் பல  கிராமங்களின் வீடுகள், மயானங் கள், பள்ளிகள், அங்கன்வாடிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களும் அடங்கும். பல தலைமுறைகளாக உழைத்து உருவாக்கிய வாழ்வா தாரம் அரசால் இரக்கமின்றி அழிக்  கப்பட்டு வருகிறது. விவசாயிகள் சங்கம் இந்நிலையில், நிலம் கையகப்  படுத்தும் பகுதியான சீனிவாசப்பூர்  தாலுகாவில் உள்ள படப்பள்ளி,  தொட்டமலதொட்டி, கேதகன ஹள்ளி, சிவபுரா ஆகிய கிராமங்க ளுக்கு அகில இந்திய விவசாயிகள்  சங்க பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் தலைமையிலான குழு வினர் நேரில் சென்று ஆய்வு மேற்  கொண்டனர். 300 மாமரங்களை இழந்த சவுதா  ரெட்டி என்பவரை இக்குழு சந்தித்  தது. நிலத்தை கையகப்படுத்து வதை எதிர்த்த வெங்கடலட்சம்மா என்ற பெண் கொடூரமாகத் தாக்கப் பட்டுள்ளார் என்பதும் ஆய்வின் போது தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வுக் குழுவில் அகில  இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் எஸ்.கே. ப்ரீஜா,  இணைச் செயலாளர் வல்சன் பனோலி, கர்நாடக மாநில விவசாயி கள் சங்க தலைவர்கள் பரத்ராஜ், சூரியநாராயணா, வெங்கடேஷ், நவீன், கங்கம்மா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். பாதிக்கப் பட்ட விவசாயிகளிடம் கலந்துரை யாடிய குழுவினர், அவர்களுக்கு நீதி கிடைக்க அரசியல் ரீதியாக வும், சட்ட ரீதியாகவும் துணை நிற்  போம் என உறுதி அளித்தனர்.