states

img

ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

அப்பாவே கொல்வாரா? \\

சாதி, அப்பாவையே கொலை செய்ய வைத்து விடுமா என்று அழுது கொண்டே வினா எழுப்பு கிறார் விவேக். மான்யாவைக் காதல் திருமணம் செய்து  கொண்டு நல்ல வாழ்க்கையை வாழத் தொடங்கி யிருந்தார். காதல் துணைவி கர்ப்பமான செய்தியை நண்  பர்களுடன் பண்டிகையைப் போலக் கொண்டாடினார். தனது குழந்தை வந்து தாத்தா, பாட்டியை எப்படி மாற்றப் போகிறது பார் என்று மான்யாவிடம் அடிக்கடி  சொல்லி வந்தார். ஆனால், மகள் என்றும் பாராமல் துடிக்கத் துடிக்கக் கொலை செய்து விட்டார்கள். சாதி  மறுப்புத் திருமணம் செய்து கொண்டதுதான் காரணம்.  கர்நாடகத்தின் தார்வாட் மாவட்டத்தில்தான் இது நடந்தி ருக்கிறது. ஆணவப் படுகொலைத் தடுப்பு சிறப்புச் சட்டம்  கொண்டு வருவது பற்றி விவாதிப்போம் என்று கர்நாடக  மாநில முதலமைச்சர் சித்தராமையா முதன்முறையாக அறிவித்திருக்கிறார்.

நான்குமுனை ஆபத்து?

ஆரவல்லி பாதுகாப்பு இயக்கம் நான்கு மாநிலங்க ளுக்கு விரிவடைந்து வருவது பற்றி பாஜக கவலை யடைந்துள்ளது. மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், தில்லி, ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நீதி மன்றத்தின் மீது இருந்த நம்பிக்கையும் மக்களுக்குப் போய் விட்டதால் தெருக்களில் இறங்கிவிட்டார்கள். ராஜஸ்தானில் இடதுசாரிக் கட்சிகளும், விவசாய சங் கங்களும்தான் இந்தப் போராட்டத்தைத் தொடங்கின. மக்கள் ஆதரவைப் பார்த்துவிட்டு காங்கிரசும் ஆதரவு  தந்தது. இப்போது ராஜஸ்தானைத் தாண்டி, மேலும்  மூன்று மாநிலங்களுக்கும் போராட்டம் பரவியிருக்கிறது.  புதிதாக கனிமச் சுரங்கங்களுக்கான அனுமதி இல்லை  என்ற அறிவிப்பால் மக்களை ஏமாற்ற முடியவில்லை.  ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை நடைமுறைப் படுத்தக்கூடாது என்று மக்கள் உறுதியாக நிற்கிறார்கள்.  போராட்டங்களில் தலையைக் காட்டிவிடலாமா என்று பாஜகவினரே யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஏமாற்றுவதா?

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசுக்கெதிராக விவசாயி களின் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரோஸ்பூர், தரன் தரன், கபூர்தலா, மோகா மாவட்டங்களில் விவ சாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி நின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவா ரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஆறுதல் தந்தது.  ஆனால், அறிவிக்கப்பட்ட நிவாரணம் விவசாயி களுக்கு வழங்கப்படவில்லை. பல மாதங்களாகக் காத்தி ருந்தும் கிடைக்காததால், ஜனவரி 1 முதல் பாதிக்கப் பட்டவர்களில் 11 விவசாயிகள் காலவரையற்ற உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக மீதான விவசாயிகளின் அதிருப்தியைப் பயன்படுத்திதான் ஆம்  ஆத்மிக் கட்சி செல்வாக்கை வளர்த்துக் கொண்டது. இப்போது தங்களை ஏமாற்றுகிறது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அடுத்து தில்லி..?

தில்லியின் பகுதிகளில் ஒன்றான நொய்டாவில் குடி நீரில் கழிவுநீர் கலந்ததால் பலர் வயிற்றுப்போக்கால்  பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள னர். இந்தூர் (ம.பி.,) பாதிப்பின் தாக்கம் இன்னும் நீங்க வில்லை. இந்த உயிரிழப்புகளுக்கும் பிறகு மாநில அரசு,  மாவட்ட நிர்வாகங்களின் அலட்சியம் நீதிமன்றத்தின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளன. இந்நிலையில், இந்தூர்  மாதிரியான நிலைமை தில்லியிலும் நிலவுகிறது என்று  பல பகுதிகளில் மக்களிடமிருந்து குரல்கள் எழுந்துள் ளன. இல்லையில்லை... நாங்கள் பார்க்கப் போகிறோம் என்று தில்லி நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஷ்சிங் அலறியிருக்கிறார். அலறுவதால் ஒன்றும் நடக்காது.. குழாய்கள் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்த்து சரி செய்ய வேண்டும். இல்லையேல், இந்தூருக்கு அடுத்தது தில்லி என்ற நிலைதான் உருவாகும் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.