states

தலச்சேரி சிபிஎம் ஊழியர் லதேஷ் கொலை வழக்கு 7 ஆர்எஸ்எஸ் - பாஜகவினருக்கு  

தலச்சேரி சிபிஎம் ஊழியர் லதேஷ் கொலை வழக்கு 7 ஆர்எஸ்எஸ் - பாஜகவினருக்கு  

ஆயுள் தண்டனை கேரளத்தில் கண்ணூர் மாவட்டம் தலாயி பகுதியைச் சேர்ந்த சிபிஎம் தலைவர் கே. லதேஷ் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ்-பாஜக தொண்டர்கள் 7 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலச்சேரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதி மன்ற (IV) நீதிபதி ஜே. விமல், கொலை யில் நேரடியாகப் பங்கேற்ற ஆர்எஸ்எஸ்- பாஜக தொண்டர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். பி. சுமித் (38), கே.கே.பிரஜீஷ்பாபு (46), பி. நிதின் (37), கே. சனல் (37), ஸ்மிஜோஷ் (42), சஜீஷ் (37), வி. ஜெயேஷ் (39) உள்ளிட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் 5 பேர் விடுவிக்கப்பட்டனர். மீனவர் சங்க (சிஐடியு) தலைவரும், சிபிஎம் திருவங்காடு உள்ளூர் குழு உறுப்பினருமான தலாயியைச் சேர்ந்த கே.லதேஷ் (28), 2008 டிசம்பர் 31 அன்று  மாலை 5.30 மணிக்கு சாக்யத்துமுக்கு கடற்கரையில் வெட்டிக் கொல்லப்பட் டார். இந்த தாக்குதலில் சிபிஎம் ஊழியர்  லாலு என்ற மோகன்லால் பலத்த காய மடைந்தார்.