புதுதில்லி அமலாக்கத்துறை துணை இயக்குநர் பி.ராதாகிருஷ்ணன் பணி நீக்கம்
லஞ்சக் குற்றச்சாட்டுகளை எதிர் கொண்ட துணை இயக்குநர் பி.ராதாகிருஷ்ணனை அமலாக் கத்துறை பணியில் இருந்து நீக்கியுள்ளது. கொச்சியில் தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த அவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந் ததை அடுத்து, முதலில் சென்னைக்கும் பின்னர் ஸ்ரீநகருக்கும் (ஜம்மு-காஷ்மீர்) மாற்றப்பட்டார். தற்போது ஸ்ரீநகரில் துணை இயக்குந ராகப் பணியாற்றி வந்த நிலையில், ஒன் றிய நிதியமைச்சகம் இந்த நடவடிக்கை யை எடுத்துள்ளது. ராதாகிருஷ்ணன் மீதான புகார்கள் குறித்து அமலாக்கத் துறை முதற்கட்ட விசாரணையில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அமைச்சகம் அவருக்கு கட்டாய ஓய்வு அளித்தது. இதனால் பி. ராதாகிருஷ்ணன் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். கொச்சியில் உள்ள சில அமலாக்கத் துறை அதிகாரிகள் லஞ்சப் பரிவர்த்த னைகளில் ஈடுபட்டதாக விஜிலென்ஸ் முன்பு தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையின் உதவி அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூத்த அதிகாரி பி.ராதாகிருஷ்ணன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக நிதியமைச்ச கம் மூன்று நாட்களுக்கு முன்பே அதிகா ரப்பூர்வ உத்தரவை பிறப்பித்தது.
