states

திரிணாமுல் அலுவலகத்தில் அமலாக்கத்துறை  திடீர் சோதனை மேற்குவங்கத்தில் இந்த ஆண்டு மார்ச்

திரிணாமுல் அலுவலகத்தில் அமலாக்கத்துறை  திடீர் சோதனை மேற்குவங்கத்தில் இந்த ஆண்டு மார்ச்

அல்லது ஏப்ரல் மாதத் தில் சட்டமன்றத் தேர்தல் நடை பெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 மாத காலமே உள்ள நிலையில், கொல்  கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யுடன் தொடர்புடைய அலுவலகங்கள் மற்றும் அக்கட்சியின் தேர்தல் பணி களைக் கவனிக்கும் “ஐ - பேக்”  நிறுவ னத்தின் அலுவலகம், ஐடி பிரிவு பொறுப்  பாளரான பிரதிக் ஜெயின் (திரிணாமுல் காங்கிரஸ்) வீடு என பல இடங்களில் அம லாக்கத்துறை வியாழக்கிழமை அன்று அறிவிப்பு சம்மன் இன்றி சோதனை நடத்தி யது. சோதனை நடந்து கொண்டிருந்த போதே மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் கொல்கத்தா காவல் ஆணையர் ஆகியோர் நேரடியாக பிரதிக் ஜெயினின் இல்லத்திற்குச் சென்  றனர். அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த  அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.  திரிணாமுல் அலுவலகத்தில் திடீர்  சோதனை, அமலாக்கத்துறை அதிகாரி களிடம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி  வாக்குவாதம் உள்ளிட்ட பிரச்சனை களால் மேற்கு வங்க அரசியல் களம் பதற்றமான சூழலில் சிக்கியுள்ளது.