world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஈரான் அதிகாரிகளுக்கு பிரிட்டன் தடை 

ஈரான் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மோ மெனி, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளபதி கள், அதிகாரிகள் என 10 நபர்கள் மற்றும் 1 நிறுவ னத்தின் மீது பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது. பிரிட்டன் அரசு  ஏற்கெனவே பல ஈரான் தலைவர்கள், அதிகாரிகள்  மற்றும் நிறுவனங்கள் என  550-க்கும் மேற்பட்ட தடைகளை விதித்துள்ளது. இதில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) முழுமையா கத் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சமீப நாட்களில் ஈரான் மீது தடை நடவடிக்கைகளை அதிகரித்து வரும் சூழலில் பிரிட்டனும் தடை விதித்துள்ளது.

இந்தியா எதுவும் தெரிவிக்கவில்லை :  ரஷ்யா தகவல்

இந்திய அரசு தங்களிடம் இருந்து கச்சா எண் ணெய் வாங்குவதை நிறுத்துவது குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை என்று ரஷ்ய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா-அமெரிக்க ஒப் பந்த அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப் ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்குவதை நிறுத்துவதாக இந்தி யா தன்னிடம் கூறியுள்ளதாகவும் அறிவித்திருந் தார். இந்நிலையில்  டிரம்ப் அறிவிப்புக்கு மாறாக ரஷ்ய, இந்தியா அவ்வாறு கூறவில்லை என தெரி வித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித்தொடர்பாளர்  டிமிட்ரி பெஸ்கோவ் இதனை கூறியுள்ளார்.

ஈரான் அணுசக்தி விவகாரம்  தொடா் பேச்சுவார்த்தை 

ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு லக நாடுகளுக்கு இடையே அணுசக்தி விவ காரத்தில் நீடித்து வரும் பதற்றத்தைத் தணிக்க, ரஷ்யா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரான் மீது சில நாடுகளுக்கு உள்ள கவலைகளைப் போக்க ஈரா னிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, ரஷ்யாவுக்கே கொண்டு வந்து சுத்திகரிக்கவோ அல்லது பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவோ தாங்கள் தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நாங்கள் பேசி வருகிறோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

காசாவில் படுகாயமடைந்தவர்களை  ஏற்க ஐ.நா வேண்டுகோள்

காசா மற்றும் எகிப்திற்கு இடையிலான ரஃபா எல்லை மீண்டும் திறக்கப் பட்டுள்ள நிலையில், காசாவிலிருந்து வரும் நோ யாளிகளை அதிக நாடுகள் ஏற்க முன்வர வேண்டும் என்று ஐ.நா மனிதாபிமான அமைப்பு கள் கோரிக்கை விடுத்துள்ளன. இஸ்ரேல் ராணு வத்தின் குண்டு வீச்சு, நிவாரணப் பொருட்களுக் கான தடை ஆகியவற்றின் காரணமாக காசாவில் சிகிச்சை பெற முடியாமல், வெளியே அழைத்துச் செல்லப்பட வேண்டிய நிலையில் 4,000 குழந்தைகள் உட்பட 18,500-க்கும் மேற்பட்டநோயாளிகள் உள்ளனர்.

காங்கோ சுரங்க விபத்து  பலியானவர்களுக்கு அஞ்சலி 

காங்கோவில் உள்ள டாண்டலியம் சுரங் கத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரி வில் சிக்கி பெண்கள், குழந்தைகள், தொழிலாளர் கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள்  உயிரிழந் தனர். காணாமல் போன பலரின் நிலை இன்னும் தெரியவில்லை. இந்தத் துயர சம்பவத் தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த சுரங்கத்தை ருவாண்டாவில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள எம்23 என்ற ஆயுதக்குழு கைப்பற்றி கனிமங்களை சுரண்டி விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  

30 ஆயிரம் தொழிலாளர்களை பணி நீக்கும் ஆரக்கிள் நிறுவனம்

வாஷிங்டன்,பிப்.3- அமேசானை தொடர்ந்து ஆரக்கிள் நிறுவனம் 30 ஆயிரம் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. செயற்கை நுண்ண றிவு தொழில் நுட்பத்தை கொண்டு வந்ததன் கார ணமாக அமேசான் நிறுவனம் 2025 முதல் தொழிலாளர்களை  பணிநீக்கம் செய்து வருகிறது. சமீபத்தில் 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் வழங்கியது.   அமேசானை தொடர்ந்து தற்போது ஆரக்கிள் நிறுவனமும் 30 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022-23-க்கு  இடைப்பட்ட காலத்தில் பல்வேறு காரணங்களை கூறி சுமார் 27,000 ஊழியர்களைப் பணியிலிருந்து அமே சான் நீக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடி வெடுத்து அந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஊழி யர்களுக்கான 90 நாட்கள் காலம் கடந்த ஜனவரி 26 உடன் முடிவடைந்தது. அமேசான் வெப் சர்வீசஸ், ரீடைல், பிரைம் வீடியோ, மனித வள மேம்பாட்டுத் துறை ஆகிய பிரிவுகளில் பணி யாற்றும் உயர் அதிகாரிகளையும் சாப்ட்வேர் இன்ஜினியர் உள்ளிட்டோரும் பணி நீக்கத்திற்கு ஆளாவார்கள் என கூறப்பட்டது. இதே போல தற்போது ஆரக்கிள் நிறுவ னத்திலும்  வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆட் குறைப்பு நடவடிக்கை என்று இது கூறப்படுகிறது. அந்த நிறுவனம் ஓபன் ஏஐ நிறுவனத்துடனான ரூ.27 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.  இது ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் அதிக செலவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 20,000 முதல் 30,000 தொழிலாளர்க ளை பணி  நீக்கம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் சுமார் ரூ.91 ஆயிரம் கோடியை ஆரக்கிள் நிறுவனம் எடுத்துக்கொள்ள உள்ளது.  தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிற பெருநிறுவனங்கள் தங்களின் லாபத்தை அதிகரிப்பதற்காக தொழி லாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட  தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தொழிலாளர்களின் பணிச் சுமையை   குறைப்பதற்கு பதிலாக அத் தொழில் நுட்பத்தை கொண்டு வந்து தொழிலா ளர்களை வீட்டுக்கு அனுப்பும் வேலையையே கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்து வருகின்றன. மேலும் குறைந்த தொழிலாளர்களின் தலையில் அதிக பணிச் சுமையை திணித்து அவர்களை சுரண்டும் வேலையும் நடைபெறுகிறது.