மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
சட்டமன்றத் தேர்தலையொட்டி ஒன்றிய அரசு புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறது. எனது கட்சியின் தேர்தல் வியூகங்கள், வேட்பாளர் பட்டியல் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முயற்சித்தனர். கட்சி ஆவணங்களை எடுக்க வேண்டியது அமலாக்கத்துறையின் வேலையா? பாஜக அலுவலகங்களில் நாங்கள் சோதனை மேற்கொண்டால் ஏற்பார்களா?
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்
உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. எந்தவிதமான விசாரணையும் இன்றி அவ்விருவரும் 5 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கின்றார்கள். வாழ்வுரிமையையும் கருத்துரிமையையும் சுதந்திரத்தையும் கேலிக்கூத்தாக்குகின்றது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்
3 முதல் 6 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பீர்கள் என மருத்துவர்கள் கூறினர். என்னுடைய நுரையீரல் மற்றும் இதயத்துக்கு இடையே இருந்த கட்டி, நரம்பு மண்டலத்தை அழுத்தியது. ஆனாலும் மீண்டுவிட்டேன். மன தைரியமே முக்கியம்.
