tamilnadu

img

கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தேசிய அளவிலான கூட்டு மேடை உதயம்

கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தேசிய அளவிலான கூட்டு மேடை உதயம்

நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு

புதுதில்லி நாட்டின் விவசாய மற்றும் கிராமப்புற தொழிலா ளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட (MGNREGA) பணியாளர்கள் மற்றும் வேலைக்கான உரிமைக்காகப் போராடும் பல்வேறு அமைப்பு களை ஒன்றிணைத்து, தேசிய அள விலான புதிய கூட்டு மேடை ஒன்றை  உருவாக்கப்பட்டுள்ளது. தில்லி சுர்ஜித் பவனில் வியாழ னன்று (ஜன., 8) நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் இந்த வர லாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்க ப்பட்டுள்ளது. ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய விபி - ஜி ராம் ஜி சட்டத்தைத் திரும்பப் பெறவும், முடக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் வலு வாக நடைமுறைப்படுத்தவும் இக்கூட்டத்தில் அறைகூவல் விடுக்கப்பட்டது. சுமார் 100-க்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டி ற்கு விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பி.வெங்கட், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் போராட்ட குழுவின் அனுராதா தல்வார், முகேஷ் மற்றும் வி.எஸ். நிர்மல் (பாரதிய கேத் மஜ்தூர் யூனியன்) ஆகியோர் தலைமை தாங்கினர். பிரபல பொருளாதார அறிஞர் பேரா. ஜெயதி கோஷ் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்று கையில், உலகளாவிய மூலதன சக்திகளின் ஆதிக்கம் உழைக்கும் வர்க்கத்தை, குறிப்பாக கிராமப்புற ஏழைகளை கடுமையாகப் பாதித்து வருவதாகவும், அவர்களின் ஒரே பிடிமானமாக இருந்த ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் புதிய  சட்டத்தின் மூலம் அரசு பறிப்பதாக வும் குற்றம்சாட்டினார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.வெங்கட், இப்புதிய கூட்டு மேடையின் எதிர்காலச்செயல் பாடுகள் குறித்த வரைவு அறிக்கை யை முன்வைத்தார். அவரைத் தொடர்ந்து பேசிய நிகில் டே மற் றும் அனுராதா தல்வார், புதிய வி பி ஜி ராம் ஜி சட்டம் தொழிலாளர் களின் உரிமைகளை எவ்வாறு நசுக்கு கிறது என்பதையும், அது தற்போ தைய மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தைவிட மோசமான நிலையை உருவாக்கும் என்பதையும் கள அனுபவங்களின் அடிப்படையில் விளக்கினர். இந்த வட்டமேசை மாநாட்டிற்கு சிஐடியு தலைவர் சுதீப் தத்தா, ஐஎன்டியுசி சார்பில் ஷாநாஸ் ரபிக், ஏஐடியுசி சார்பில் வி.எஸ்.கிரி ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.  மேலும், ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர்கள் ரஞ்சன் சிவ சாகர், பிரேம் சிங் கெலாட் ஆகி யோர் உரையாற்றுகையில், ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிதை ப்பது கிராமப்புற பொருளா தாரத்தையே அழித்துவிடும் என்று எச்சரித்தனர். மாதவி (ஜே  ஏடிஎஸ்), அர்ச்சனா பிரசாத் ( மாதர் சங்கம்), ஹிமக்னராஜ் (வாலிபர் சங்கம்), ஹரிஷ் பாலா (இளை ஞர் பெருமன்றம்), சுபாஷ் ஜாகர் (மாணவர் சங்கம்) உள்ளிட்ட பல் வேறு வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் இப்போராட்டத்திற்கு தங்கள் முழு ஆதரவை வழங்கினர். ஒரு மாத கால போராட்டத்திட்டம் இக்கூட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க செயலாளர் விக்ரம் சிங் முன்மொழிந்த தீர்மான ங்களின்படி, ஜனவரி 10 முதல் பிப்ரவரி 12 வரை ஒரு மாத கால நாடு தழுவிய தொடர் போராட்டங் கள் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. வரும் ஜனவரி 26 குடி யரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், புதிய சட்டத்தை நிராகரித்துத் தீர்மானம் நிறைவேற்றவும், பிப்ரவரி 2ஆம் தேதி வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்ட தினத்தை ‘அகில இந்திய எதிர்ப்பு தினமாக’ அனு சரித்துக் கிராமங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முக்கிய கோரிக்கைகள் ஒன்றிய அரசு உடனடியாக வி பி  ஜி ராம் ஜி சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் ; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் ; ஆண்டுக்குக் குறைந்த பட்சம் 200 நாட்கள் வேலை மற்றும் 700 ரூபாய் தினக்கூலி வழங்க வேண்டும்  மற்றும் வருகைப்பதிவு நடைமுறையில் உள்ள தொழில் நுட்பச் சிக்கல்களை நீக்கி கிராம சபைகளுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும் என இக்கூட்டு மேடை வலியுறுத்தியுள்ளது. கிராமப்புற தொழிலாளர்களின் வேலைக்கான உரிமையையும் கண்ணியத்தையும் காக்க, பிப்ரவரி 12ஆம் தேதி மத்திய தொழிற்சங் கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துடன் இணைந்து இந்தப் போராட்டத்தின் முதல் கட்டம் நிறைவடையும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.