பைலாடிலா காடுகளில் சுரங்கப்பணி சத்தீஸ்கரில் பழங்குடியின மக்கள் போராட்டம்
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பைலாடிலா காடுகள் புகழ்பெற்றவை ஆகும். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இந்த அடர்ந்த காட்டில், ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (NMDC) இரும்புத் தாது சுரங்கப் பணிகளை விரிவுபடுத்த ஒன்றிய சுற்றுச் சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சுரங்க விரிவாக்கப் பணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள் ளது. பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் நீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப் படும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலை யில், தார்வாடா உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியின மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். காடுகளை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபத்தை கொடுக்கும் இந்த நடவடிக்கைக்கு எதி ராக வலுவான போராட்டம் நடத்து வோம் என மோடி அரசுக்கு பழங்குடியின மக்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
