அசாம் காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய்
அசாமில் பாஜக தோல்வி பயத்தில் உள்ளது. கட்சி கூட்டத்தில்,”எங்களுக்கு வாக்களிக்காத நபர்களை தற்போதே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்” என பாஜகவினர் கோரிக்கை வைத்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி
ஜம்மு காஷ்மீரில் அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளின் நடவடிக்கைகள் ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட போது, சோதனைகள் நடக்கும்போது, சில அரசியல் கட்சிகள் மவுனம் காத்தன. இதன்விளைவு தற்போது இந்த நிலையை நாடு முழுவதும் பார்க்க முடிகிறது.
வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா
முனைவர் உமர் காலித்தை நான் சந்தித்ததேயில்லை. ஏன், அவரை பார்த்தது கூட இல்லை. எனினும், டிசம்பர் 2019இல் ஒருநாள், பாரபட்சமான சட்டம் ஒன்றிற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் இருவரும் பங்கேற்றோம். அவர் தில்லியிலும், நான் பெங்களூருவிலும். உமர் காலித்தால் செய்ய முடியாத ஆய்வுகளையும், எழுத்துப் பணிகளையும் என்னால் தொடர்ந்து செய்ய முடிகிறது என்றால், அதற்கு எனது பெயர் ‘ராமச்சந்திரா’ என்றும், அவரது பெயர் ‘உமர்’ என்று இருப்பதும்தான் காரணமா?
மூத்த பத்திரிகையாளர் ஊடகவியலாளர் கிருஷ்ண காந்த்
‘நாட்டை தலைகுனிய விட மாட்டோம்’ என சொன்னவர்கள் இப்போது டிரம்ப்பிடம் சரணடைந்து கிடக்கின்றனர். வரலாற்றிலேயே முதன்முறையாக, முதுகெலும்பின்றி ஊர்ந்து கொண்டிருக்கும் ஒரு பிரதமர் நமக்கு வாய்த்திருக்கிறார்.
