tamilnadu

img

மோடி அரசிடம் நிதிகேட்டு நெருக்கும் சந்திரபாபு

மோடி அரசிடம் நிதிகேட்டு நெருக்கும் சந்திரபாபு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கு (MGNREGA) மாற் றாகக் கொண்டு வரப்பட்டுள்ள புதிய “விபி ஜி ராம்  ஜி” சட்டத்தை அமல்படுத்த மோடி அர சிடம் கூடுதல் நிதி உதவி கோரியுள்ளார் பாஜக கூட்டணி ஆளும் ஆந்திர மாநி லத்தின் முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு. இதுதொடர்பாக தில்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் நேரில் சந்தித்த சந்திரபாபு, “விபி ஜி  ராம் ஜி” சட்டத்தின் கீழ் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப் பகிர்வு விகிதம் 60:40 ஆக மாற்றப்பட்டுள் ளது. இது மாநில அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இதற்கு முன் னால் இருந்த மகாத்மா காந்தி வேலை திட்டத்தில் ஒன்றிய அரசு 100% நிதி  வழங்கி வந்தது. அதனால் விபி ஜி ராம் ஜி திட்டத்திற்கு கூடுதல் நிதி அளித் தால் மட்டுமே ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சமாளிக்க முடியும். ஆந்தி ராவின் தலைநகராக அமராவதியை அறிவிக்க நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து, அதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ள தாக செய்திகள் ள்வெளியாகியுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி  முக்கியப் பங்கு வகிக்கிறது. அதாவது அக்கட்சியின் ஆதரவால் தான் மோடி இன்னும் பிரதமர் பதவியில் அமர்ந்து இருக்கிறார். இத்தகைய சூழலில் விபி ஜி ராம் ஜி திட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்க மோடி அரசை  சந்திரபாபு கேட்டுள்ளது பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.