tamilnadu

img

போக்குவரத்து தொழிற்  சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து துறையின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், மே மாத ஊதியத்தில் பிடித்தம் செய்த தைக் கண்டித்தும், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்  சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் இதேபோன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய பணிமனைகள் முன்பும், விழுப்புரம் மண்டல அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டங்கள்  நடைபெற்றன. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பணிமனை 2இன் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.