tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை தகர்த்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி செவ்வாயன்று (ஆக.27) சைதாப்பேட்டை அம்பேத்கர் சிலை முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.லெனின் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் பி.சுந்தரம், பொருளாளர் எஸ். சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.