எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் இருந்த தீண்டாமை வடிவங்கள் தற்பொழுது இல்லை. ஆனால், நவீன தீண்டாமை வடிவங்கள் எங்கும் பரவிக்கிடக்கிறது. வேறு எந்த அமைப்பும் செய்யாத அள விற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் உடனடித் தலையீடும் உள்ளது. இன்றைக்கும் பட்டியல் இன மக்களுக்கு மிகப்பெரிய அரணாக இந்த அமைப்பு உள்ளது. மார்க்சை விட அம்பேத்கர் தான் சிறந்த தலைவர் என சிலர் கூறுகின்ற னர். நமக்கு இரண்டு தலைவர்களும் தேவை. வர்க்கப் போராட்டம் தவிர்க்க முடி யாதது. வர்க்க அரசியல் பேசுபவர்கள் சாதி ஒழிப்பு அரசியல் பேசுபவர் களுக்கு விரோதிகள் அல்ல. அம்பேத் கர் இளமைக் காலத்தில் தொழிற்சங்கத் தை நடத்தியுள்ளார். அந்த அனு பவத்தில்தான் ஏராளமான தொழிலாளர் நலச் சட்டங்களை அவர் கொண்டு வந்தார். உலக அளவில் சந்தைப் பொரு ளாதாரம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில் வர்க்கப் போராட்டம் என்பது மிக அவசியம்.
தற்பொழுது உச்சநீதிமன்றத்தில் பாபர் மசூதி குறித்த வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கில் ஆதாரங் களின் அடிப்படையில் அல்லாமல் மக்களின் நம்பிக்கைகளை நீதிமன்றம் ஏற்க வேண்டமென வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு என்றால், அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணானது. ஏற்கனவே, அயோத்தியில் 52.5 எக்கர் நிலத்தை மூன்றாக பிரிக்கும் சமரச ஏற்பாட்டிற்கு நீதிமன்றம் வழிகாட்டிது. இது கிராமத்தில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்தைப் போன்றதுதான். அதிலும் பிரச்சனை தீரவில்லை. எந்தவித சமரசத்துக்கும் தயாராக இல்லாத அமைப்புதான் இந்துத்துவம். இது மிக மிக மோசமான போக்கு. நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்புகள் என்றால் நாட்டில் உள்ள அனைத்துமே பெரும்பான்மையினருக்குத்தான் சாதகமாக முடியும்.
கொச்சியில் நடந்த உலக தமிழ் பிராமணர்கள் மாநாட்டில், பிரா மணர்கள் பெற்ற அதிகாரத்தை யாரும் பறிக்க முடியாது என்று ஒரு நீதிபதியே பேசுகிறார். இது மனுதர்மத்தின் ஆட்சி அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் ஆட்சி. அப்படி இருக்கும்போது நீதிபதி யின் கருத்தை நம்மால் ஏன் மறுக்க முடியவில்லை? இது போன்றவற்றை எதிர்த்து வாதாடவும், போராடவும் நாம் தயாராக இருக்க வேண்டும். இன்றைக்கு காஷ்மீர் மக்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லா மியர்கள் தங்கள் பெருநாளை கொண்டாட முடியாமல் தடுக்கப்பட்டி ருக்கிறார்கள். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரே மதம் என்கிற மதவாதிகளின் கோட்பாடு முறியடிக்கப்பட வேண்டும்.
மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய நீதியரசர் சந்துரு பேசியதிலிருந்து