tamilnadu

img

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்தும், உலக அமைதியை வலியுறுத்தி சிபிஎம் கலவை தாலுகா குழு சார்பில் புதனன்று (ஜன. 7) கலவை தாலுகா செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மூத்த தோழர் டி. சந்திரன், மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ. தவராஜ், தாலுகா குழு உறுப்பினர்கள் என். சந்திரா, என். ஆதிமூலம், ஆர். தனசேகர், வேட்டைக்காரன் பழங்குடி சங்க மாநிலப் பொருளாளர் எம். சேட்டு, மாவட்டச் செயலாளர் வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.