மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி ஆளுநர் மாளிகை நோக்கி லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தது வருகிறது.
இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணிக்கு இன்று இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதைத்தொடர்ந்து இன்று ஆலந்தூரில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி லட்சக்கணக்கான இஸ்லாமிய அமைப்பினர் பேரணியாக செல்கின்றனர். பேரணியில் பங்கேற்றுள்ளவர்கள் நீண்ட தேசியக்கொடியை ஏந்தியவாறு மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.