கடலூர், ஜூன் 14- பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில், 2 மாத ஊதியத்தை உடனே வழங்கக் கோரியும், பிரதி மாதம் 7ஆம் தேதி ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வலியுறுத்தி யும், பணி தன்மைக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், இபிஎப், இஎஸ்ஐ திட்டங்களை மாதாமாதம் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர்கள் பி.இரத்தினம், எஸ்.வி.பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி பால்கி துவக்க உரையாற்றினார். சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு சிறப்புரையாற்றினார். கே.டி.சம்பந்தம் (பி.எஸ்.என்.எல்), கே.விஜய்ஆனந்த் (ஒப்பந்த தொழி லாளர் சங்கம்) ஆகியோரும் பேசினர். கொல்கத்தாவில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய தைக் கண்டித்தும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்க த்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் சங்க மாவட்டச் செயலாளர் லெனின் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.