tamilnadu

img

ஊரடங்கு தளர்வுகளால் இயல்புக்கு திரும்புகிறது சென்னை மாநகரம்

சென்னை, மே 11 - ஊரடங்கு தளர்வு காரணமாக 48 நாட்களுக்கு பிறகு சென்னையில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன, சென்னை மாநகரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் 2 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தற்போதைய 3ஆம் கட்ட ஊரடங்கு மே 17 அன்று முடிவுற உள்ளது. இருப்பினும், சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்களை அறிவித்தது. அதன்படி, பெரும்பாலான கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள டீக்கடைகள், உணவகங்கள், சிறுசிறு தனிக்கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகைகடைகளுக்கு விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடு குறைக்கப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் அண்ணா சாலை, பூவிருந்தமல்லி நெடுஞ்சாலை, 100 அடி சாலை போன்ற முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து சுமார் 30 விழுக்காடு அளவிற்கு இருந்தது. சிக்னல்கள் இயக்கப்பட்டு நெரிசலின்றி வாகனங்கள் சென்றன.