tamilnadu

img

வெறிச்சோடியது சென்னை மாநகரம்

கொரோனா பரவலைத் தடுக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் ஜுன் 19 அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.  ஜுன் 21, 28 தேதிகளில் எவ்விதத் தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஜுன் 20 இரவு நள்ளிரவு முதல் அமலான முழு ஊரடங்கின் காரணமாக வெறிச்சோடியது சென்னை அண்ணாசாலை. பிற சாலைகளும் வெறிச்சோடின. மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தீவிர சோதனையும் நடந்தது.  (செய்தி : 5)