tamilnadu

புழல் சிறையில் கைதிகளுக்கு ‘கவுன்சிலிங்’

செங்குன்றம், ஏப்.17- புழல் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் குற்றவாளிகள் என மொத்தம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் முதல் முறையாக குற்றம் செய்து கைது செய்யப்பட்டவர்களும் அடங்குவர். இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முதல் முறையாக குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு ‘கவுன்சிலிங்’ வழங்க நீதிபதிகள் முடிவு செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தலைமையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 நீதிபதிகள் புழல் சிறையில் கைதிகளுக்கு அறிவுரை வழங்கினர்.இதற்காக சிறை வளாகத்தில் உள்ள ஆடிட்டோரிடயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல் முறை குற்றவாளிகள் 150 பேருக்கு நீதிபதிகள் தனித்தனியாக ஆலோசனை மற்றும் அறிவுரை கூறினர்.ஒவ்வொரு கைதிகளுக்கும் சுமார் 5 முதல் 10 நிமிடம் வரை கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது சிறையில் இருந்து செல்லும்போது புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தார்கள். இந்த கவுன்சிலிங் 3 மணி நேரம் நடந்தது.புழல் சிறையில் 150 கைதிகளுக்கு நீதிபதிகள் நேரில் சென்று கவுன்சிலிங் வழங்கியது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.