சென்னை:
சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டுடன் இந்திய நிறுவனங்கள் உள்பட உலக நாடுகள் மேற்கொண்டுள்ள வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி குளிர்சாதன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பூளுஸ்டார் ஏசி இயந்திரங்களுக்குத் தேவையான கம்பரஸ்ர் உள்பட அனைத்து உதிரிப்பாகங்களையும் சீனாவிலிருந்து கொள் முதல் செய்கிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் வருவதற்கு முன்பு கொள்முதல் செய்த உதிரிபாகங்களை கொண்டு ஏசி இயந்திரங்கள் அசெம்பிளிங் செய்யப் பட்டு வருகின்றன. ஆனால் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நிலைமை சீரடைந்தால் தட்டுப்பாடு நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பூளுஸ்டார் நிர்வாக இயக்குநர் பி.தியாகராஜன் கூறினார்.
தற்போது கப்பல் மூலமாக உதிரிபாகங்களை கொண்டு வருவது தடைப்பட்டுள்ளதால் விமானம் மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த சீனா உறுதியான நடவடிக்கை எடுத்துவருவதால் நிலைமை சீராகி அங்கு ஆலைகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.இதனால் ஏசி இயந்திரங்களின்விலை உயர்த்தப்படுமா என்று கேட்டதற்கு ஏற்கனவே மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் கம்ப்ரஸர் மற்றும் மோட்டார்கள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் மீது சுங்கத்தீர்வை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் ஏசி-க்களின் விலை உயர்ந்துள்ளது. மற்றபடி கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அல்ல என்றார் அவர்.முன்னதாக கூகுள் அலெக்சா மற்றும் உலகின் எந்த இடத்திலிருந்தும் வீட்டில் உள்ள ஏசி இயந்திரத்தைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய டி, க்யூ, ஒய் பிராண்டுகளில் புதிய புளுஸ்டார் குளிர்சாதன இயந்திரங்களை தியாகராஜன் அறிமுகப்படுத்திப் பேசினார். இதன் தொடக்கவிலை ரூ.31,990 ஆகும்.