tamilnadu

விமானப் பயணிகளுக்கு 30 நிமிடத்தில்  கொரோனா பரிசோதனை....

சென்னை:
வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு குறிப்பாக மேற்கு ஆசிய நாடுகளுக்கு செல் லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்று அந்த நாடுகள் அறிவித்துள்ளன.

எனவே வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு பரிசோதனை கட் டாயமாக்கப்பட்டுள்ளது. ரூ.900 கட்டணத் தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய் யப்படுகிறது. இதன் முடிவு தெரிய 4 மணி நேரம் ஆகும். அதுவரை பயணிகள் காத்திருக்க வேண்டும்.இப்போது அதிநவீன ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மையத்தை விமான நிலையத்தில் அமைத்துள்ளனர். இதில் பரிசோதனை செய்யும்போது முடிவுகளை 30 நிமிடங்களில் தெரிந்து கொள்ள முடியும். இதற் கான கட்டணம் ரூ.4 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் அதிகம் என்று விமான பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, கட்டணம் குறைப்பது பற்றி பரிசீலித்து வருவதாக கூறினார்கள்.முன்பு துபாய், குவைத் மற்றும் அபுதாபியில் இருந்து விமானங்கள் வருகை மட்டுமே இருந்தது. இப்போது சென்னையில் இருந்து தினமும் 4 முதல் 5 விமானங் கள் அந்த நாடுகளுக்கு செல்கின்றன. இதுவரை தினமும் 200 முதல் 250 பயணிகளுக்கு சோதனை நடப்பதாகவும் சர்வதேச பயணிகள் போக்குவரத்து அதிகரிக்கும்போது இந்த எண்ணிக்கை உயரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.