tamilnadu

img

தமிழக ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா

சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள  ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் (சி.ஆர்.பி.எப்.) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட் டது. இதையொட்டி அங்கு பணியில் இருந்த 147 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. பரிசோதனை முடிவில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது
தெரியவந்தது.  இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.