tamilnadu

img

சென்னையில் மேலும் 8 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை
நாட்டின் புதிய கொரோனா மையமாக மாறியுள்ள சென்னை மாநகரத்தில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக உயருகிறது. குறிப்பாகச் சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு கொரோனா பரவுகிறது. இதுவரை அங்குச் சென்று வந்த 200-க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 8 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அயனாவரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர், ஐஸ் அவுஸ் தீயணைப்பு உதவி ஆய்வாளர் உள்பட 8 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கடும் அதிர்ச்சி அலை உருவாகியுள்ளது.