tamilnadu

img

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினருடன் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆலோசனை

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினருடன் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆலோசனை

சென்னை, பிப். 5 - திமுக தேர்தல் அறிக்கை  தயாரிப்பு குழு தலைவர் கனி மொழி கருணாநிதி குழு வினருடன் வியாழனன்று (ஜன.5) கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் மாநிலத் தலைவர் தி.தமிழ ரசு, பொதுச் செயலாளர் இ.சர்வேசன், உதவித் தலை வர் எம்.ராஜகேசி ஆகி யோர் ஆலோசனை நடத்தி னர். அப்போது, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 24 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டியதன் அவசியத்தை புள்ளி விவர ங்களோடு எடுத்துரைத்தனர். நகர கூட்டுறவு வங்கிகளை பலப்படுத்தும் வகையில், மண்டல அளவில் நகர கூட்டுறவு வங்கிகளை இணைக்க வேண்டும் என்று  வலியுறுத்தினர். மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு கலைஞர் கருணாநிதி 20.9.2010 அன்று அரசாணை வெளியிட்டு, கருணை ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி தற்போது 5 ஆயிரத்து 500 ரூபாய் வழங் கப்படுகிறது. இதனை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். இத்திட்டத்தை விரிவாக்கி மத்திய, நகர கூட்டுறவு வங்கி ஊழியர் களையும் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  அம்சங்களை வலியுறுத்தி னர்.